வணக்கம் நண்பர்களே என்னுடைய இன்றைய பதிவில் மருத்துவம் பொறியியல் ஆகிய இரண்டையும் கலந்து உருவாக்கப்பட்ட ஒரு கண்டுபிடிப்பை பற்றி எழுத உள்ளேன் நான் எனது உலவியில் தற்செயலாக இதைப்பற்றி பார்த்தேன் இதை இப்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .
மருத்துவ உலகம் தினம் தினம் ஒரு ஆச்சர்யமான வியாதிகளையும் அதற்கான தீர்வுகளையும் ஆராய்ந்து வருகிறது அந்த வரிசையில் இப்பொழுது புதிதாக Bionic contact lens என்ற ஒரு தொடுவில்லையை கண்டு அறிந்துள்ளனர் .இது polyethylene terephthalate -- or PET என்ற பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது இது உணவுப்பொருள்களை அடைத்து வைக்கும் பைகள் தயாரிக்க பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலே காட்டப்பட்டுள்ள இந்த தொடுவில்லையை university of Washington ஐ சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவினர் உருவாக்கி உள்ளனர்.
இந்த தொடுவில்லை சாதரணமாக நாம் பயன்படுத்தும் தொடுவில்லை போல் அல்லாமல் இதில் மின்னனுசார் மின்னியல் சுற்று (Electronic circuit) மற்றும் சிறிய விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன . இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் இத்தனை சாதனங்களும் nano meter தடிமனில் அடங்கிவிடுகிறது . மேலும் இந்த அறிய கண்டுபிடிப்பை முயல்களின் கண்களில் பொருத்தி சோதனை செய்து பார்த்ததில் எந்தவித பாதிப்பையும் இது ஏற்படுத்தவில்லை .மேலும் இதன் மூலமாக நாம் பார்க்கும் தூரத்தை அதிகரிக்கவும் குறைக்கவும் முடியும் தூரத்தில் உள்ள ஒரு பொருளின் பிம்பத்தை நாம் அருகில் உள்ளது போல பார்க்கவும் முடியும். இது ஒரு கணினியின் திரை போல செயல்படுகிறது.
இதில் பொருத்தப்பட்டுள்ள சாதனங்கள் பின்வருமாறு :
1 . ஒளி உமிழும் இருமுனையம் (light emitting diodes).
2 . சாம்பல் நிறமுள்ள ஒரு வித பொடி தொடுவில்லை முதுவதும் பரவுமாறு தூவப்பட்டுள்ளது இதன் கரணம் என்னவென்றால் Microfabrication or self assembly (நுண் கட்டுருவாக்கம் ) மூலம் தொடுவில்லையில் உள்ள சாதனங்கள் தன நிலையிலேயே நகராமல் நீடிப்பதற்காக .
3 . capillary action எனப்படும் மயிர்த்துளை தாக்கம் மூலமாக எல்லா சாதனங்களையும் நிலைநிருத்துகிறார்கள்.
பயன்கள்:
1.இதனை கணினியுடன் இணைத்து அதன் மூலம் நாம் காணும் அனைத்து வகையான பிம்பங்களை பற்றிய தகவல்களயும் பெற முடியும்.
2.நாம் செல்லும் பாதையை அறிய முடியும் (GPS).
3. கணினி திரை இல்லாமலேயே நாம் video game விளையாட முடியும்.
4.இது நம் கண்களுக்கு எந்தவித தீங்கையும் ஏற்ப்படுத்தாது மேலும் நம் கண்களில் உள்ள கிருமிகளையும் கண்டறிய உதவும் .
இது தற்பொழுது ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது இதன் செயல் திறனை மேலும் அதிகரிக்கவும் wireless communication,power transmission,solar cells போன்ற தொழில்நுட்பங்கள் வருங்கலத்தில் இதனுடன் இணைக்கப்பட உள்ளன .
இது செயல்படும் விதம் குறித்த ஒரு சிறிய video தங்களின் பார்வைக்கு
நன்றி நண்பர்களே ...........
<<<<<<<<<<வாழ்க தமிழ் >>>>>>>>>>