Pages

Monday, August 1, 2011

உபுண்டு 10.4 க்கான Download Manager(FatRat)

உபுண்டு இயங்குதளத்தில் FatRat டவுன்லோட் மேனேஜர் ஐ எவ்வாறு அமைப்பது என்பதற்கான சிறிய பதிவு உங்கள் முன்னே 

இதற்கு இரண்டு வழிகள் உள்ளன முதல் வழி


1. Terminal Window மூலமாக நிறுவுவது :

அ. முதலில் ctrl+alt+T ஐ அழுத்தி Terminal Window ஐ திறக்கவும் பின்னர் கீழ் கண்ட command ஐ டைப் செய்து Enter பொத்தானை அழுத்தவும் பிறகு உங்கள் கடவு சொல்லை உள்ளிடவும் 

Command>>>>>>>>sudo apt-get install fatrat
 
ஆ . பின்னர் தானாகவே install ஆக தொடங்கும் இடையில் நமது வன்தட்டில் இடம் ஒதுக்க [y/n]? என்ற கேள்வி வரும் அதற்கு y  என்ற தேர்வை கொடுக்கவும் பின்னர் FatRat  தரவிறக்கம் செய்யப்படும் .

இரண்டாவது வழி 

2 .Ubuntu Software Center மூலமாக நிறுவுவது :

முதல் வழியை விட இது மிகவும் சுலபம் 

அ . முதலில் உங்கள் திரையின் இடது ஓரத்தில் இருக்கும் applications -> Ubuntu Software Center ஐ தேர்ந்தெடுக்கவும் ஒரு திரை தோன்றும் அதில் get software  ஐ தேர்ந்தெடுக்கவும் அங்கு search பொட்டியில் FatRat என type  செய்து Enter ஐ அழுத்தவும்  பின்னர் இன்ஸ்டால் செய்யவும் .



பின்னர் applications->internet->FatRat ஐ தேர்ந்தெடுத்து உபயோகிக்கலாம் இது கையாள மிக எளிது 

இதன் கூடுதல் வசதி என்னவென்றால் தரவிறக்கம் தரவேற்றம் இரண்டையும் செய்யலாம் 


தரவிறக்கம் செய்ய விரும்பும் முகவரியை பேஸ்ட் செய்து ஓகே பொத்தானை அழுத்தினால் போதும்.


பயன்படுத்தி பார்த்து உங்கள் கருத்தை கூறவும் .

<<<<<<<<<வாழ்க தமிழ் >>>>>>>>>