Pages

Monday, August 22, 2011

சிதிலமடைந்த சோழர் கால வரலாற்று பொக்கிஷங்கள்........

மூவர் கோவில் மற்றும் ஐவர் கோவில்

முதலில் நான் திரு ராமமூர்த்தி முத்து கிருஷ்ணன் மற்றும் சௌரப் சக்சேனா (Sourabh saxena) ஆகியோருக்கு நான் எனது உள்ளம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் ........

முதலில் நான் தற்செயலாக தேடிய பொழுது நான் இக்கோவில்களின் படங்கள் கிடைக்கும் என நினைக்கவில்லை காரணம் நமது அரசாங்கமே கண்டுகொள்ளாத இந்த கோவில்களை யார் கண்டுகொள்வார்  என்று தான் நினைத்தேன் ஆனால் என் எண்ணம் தவறு என்று கீழ்க்கண்ட படங்களை கண்ட பின்பு தான் தெரிந்து கொண்டேன் ...........

இந்த இரண்டு கோவில்களும் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில்கள் இதனை கட்டியவர் சோழ மன்னன் பூதி வர்மகேசரி .இந்த கோவில்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 36 கி மீ தொலைவில் உள்ள கொடும்பாளூர் என்ற ஊரில் அமைந்துள்ளது .

இந்த கோவிலில் பலவித சிறப்பம்சம் வாய்ந்த சிலைகள் இருந்தன மாவுக்கல்லில் செய்யப்பட்ட பிள்ளையார் , சப்த ஸ்வரங்களும் ஒலிக்கும் ஒரே கல்லால் செய்யப்பட்ட சிலை, அர்த்தனரீஸ்வரர் சிலை என நீண்டுகொண்டே போகும் . 

இதன் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால் மூவர் கோவில் கருவூலத்தில் உள்ள சிவலிங்கம் இன்னும் தனது பளபளப்பை பல நூற்றாண்டுகளாக தக்கவைத்துக்கொண்டுள்ளது.

இக்கோவிலுக்கு பக்கத்தில் ராணிகள் குளித்த குளம் ஒன்று உள்ளது இந்த குளத்தில் பூவை எறிந்தால் அது ஐவர் கோவில் குளத்தில் மிதக்கும் அதிசயமும் உள்ளது.

ஐவர் கோவிலில் தஞ்சை கோவிலில் உள்ளது போல மிகப்பெரிய நந்தி ஒன்று உள்ளது.

நான் பல முறை இந்த கோவிலுக்கு சென்றுள்ளேன் இந்த கோவில் நான் இருந்த இலுப்பூர் என்னும் ஊரிலிருந்து 7 கி மீ தூரம் தான் நான் எனது மிதிவண்டியில் இந்த கோவிலுக்கு அடிக்கடி சென்றுவந்துள்ளேன்.

சுற்றிலும் குளம், வயல் வெளிகள் என பார்க்க மிக ரம்மியமான இடம் .

மூவர் கோவில்:









































ஐவர் கோவில்:








































இக்கோவில்கள் தற்பொழுது பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது தினமும் ஆறு கால பூஜை நடந்த கோவில்கள் தற்பொழுது கவனிப்பாரின்றி கிடக்கிறது. 

முடிவை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த இரண்டு பொக்கிஷங்கள் நமக்கு சொல்லும் செய்தி என்ன தெரிமா? 

"தன் நிலையில் இருந்து சற்று தாழ்ந்தால் உன் நிலைமையும் இதுதான் மனிதா " என்று சொல்லாமல் சொல்கிறது இந்தக் கோவில்கள்.

<<<<<<<<<<வாழ்க தமிழ் >>>>>>>>>>